எதிர்க்கட்சிகளின் கூட்டணி பீகார் பாலம் போலவே இடிந்து விழும்: அமைச்சர் ஸ்மிரிதி இரானி

வெள்ளி, 9 ஜூன் 2023 (07:56 IST)
2024 ஆம் ஆண்டு அமையவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பீகார் பாலம் போலவே இடிந்து விழும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் பீகாரில் கங்கை நதியின் குறுக்கே ரூபாய் 1750 கோடியில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான பாலம் இடிந்து விழுந்தது. இது பெயர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பீகார் பாலம் போலவே இடிந்து விழும் என்றும் அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட முடியாது என்பதால் தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர் என்றும் ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பம் பீகார் பாலத்தை போலவே 2024 ஆம் ஆண்டு இடிந்து விடும் என்றும் தெரிவித்தார். 
 
இந்து தர்மத்தை அவமதித்தல், சீக்கிய படுகொலை, இந்திய எதிரிகளுடன் கைகோர்த்தல் ஆகியவை தான் ராகுல் காந்தியின் அன்புக்கான அர்த்தமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தில் மேற்பட்ட பணிகள் குறித்தும் அமைச்சர் இரானி பட்டியலிட்டார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்