’பெரிய துப்பாக்கி’யுடன் போஸ் கொடுத்த ’மணமக்கள் ’.. அதிர்ந்த மக்கள்! வெடித்தது சர்ச்சை

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:54 IST)
நாகலாந்தில் திமர்பூரில் நாகா சோசலிச கட்சித் தலைவரின் மகன் திருமணத்தில் மணமக்கள் இருவரும் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
நாகலாந்தில் திமர்பூரில் நாகா சோசலிச கட்சித் தலைவர் போகோடோ கிபா. இவரின் மகன் திருமணத்தின் போது மணமகன் - மணமகள் ஆகிய இருவரின் கையிலும் துப்பாக்கிகள் இருந்தன. அவர்களிம் பல போஸ்களில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.
 
இந்த போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். பலரும் இது தவறான முன்னுதாரணம் என கண்டனக்குரல்கள் எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்