ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் – பாஜக எம்பி பேச்சால் சர்ச்சை !

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (13:05 IST)
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேருப் பல்கலைக் கழகத்து மோடியின் பெயரை வைக்க வேண்டுமென பாஜக எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பேசியுள்ளதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

ஜே. என்.யு என அழைக்கப்படும் டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் கடந்த் 1969 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. முன்னாள் இந்தியப் பிரதமர் நேருவின் நினைவாக அவரது பெயர் இந்த பல்கலைக் கழகத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பல்கலைக் கழகத்துக்கு மோடியின் பெயரை சூட்டவேண்டுமென பாஜக எம்.பியும் பாடகருமான ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ்  தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தின் சார்பில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்ட ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ’ நான் இப்போதுதான் முதல் முறையாக ஜே.என்.யு.விற்கு வருகைத் தந்துள்ளேன்.  மோடியின் அரசால் இங்கு நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஆகவே ஜேஎன்யுவை எம்என்யு பல்கலைக் கழகமாக மாற்ற வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். மோடியின் பெயரில் இங்கு எதாவது இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

அதாவது நேருவின் பெயருக்குப் பதில் மோடியின் பெயரை அந்த பல்கலைக் கழகத்துக்கு வைக்க வேண்டுமென அவர் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்