பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான பால் உற்பத்தி விலையை உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதேசமயம் பால் விற்பனை விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் விலையை 4 ரூபாய் உயர்த்தியும், எருமை பால் விலையை 6 ரூபாய் உயர்த்தியும் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. விற்பனை விலையை 6 ரூபாய் அதிகப்படுத்தி இருந்தது.
அதன் படி ஆவின் பாக்கெட் பால்களின் மாற்றப்பட்ட விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆவினில் கொடுக்கப்படும் நீலம், ஆரஞ்சு, பச்சை என ஒவ்வொரு நிற பாக்கெட் பாலுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.