ராகுல் காந்தி பொதுக்கூட்ட மேடையில் பாஜக வேட்பாளர் புகைப்படம்! காங்கிரஸ் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 8 ஏப்ரல் 2024 (14:46 IST)
ராகுல் காந்தி கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்ட மேடையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் புகைப்படம் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மண்டலா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கர் சிங் என்பவரை ஆதரித்து ராகுல் காந்தி இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் மேடையின் பின்புறத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தனர் 
 
அதன் மத்தியில் அதே தொகுதியின் பாஜக வேட்பாளர் புகைப்படம் இருந்ததை பார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராகுல் காந்தி கலந்து கொள்ளும் காங்கிரஸ் மேடையில் பாஜக வேட்பாளர் புகைப்படம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்த போது பிரின்டிங் செய்யும் போது தவறுதலாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது 
 
அதை காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கூட கவனிக்காமல் அப்படியே வைத்துவிட்டதை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தேர்தல் பொறுப்பாளர்கள் இதை கூட சரியாக கவனிக்க மாட்டார்களா என நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்