காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அமைக்க தீவிர முயற்சி செய்து வந்தும் அது பலிக்கவில்லை என்ற நிலையில் இந்த முறை அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த முறையும் அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை என்றால் அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கூறிய போது கடந்த 1991 ஆம் ஆண்டு சோனியா காந்தி அரசியலில் இருந்து விலகி நரசிம்மராவ் அமைக்க வழி வகுத்தார் என்றும் அதேபோல் ராகுல் காந்தி கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த முறையும் ஆட்சி அமைக்கவில்லை என்றால் அவர் தாராளமாக அரசியல் இருந்து ஓய்வு பெற்ற விடலாம் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை வேறு யாரையாவது நிர்வாகம் செய்ய அவர் அனுமதிக்க வேண்டும் என்றும் உலகில் உள்ள நல்ல தலைவர்களின் முக்கிய பண்பு இதுதான் என்றும் அதை ராகுல் காந்தி உணரவில்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு யாராலும் உதவி செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.