பிஜு ஜனதா தளம் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: ஒடிசாவில் பாஜக தனித்து போட்டி..!

Mahendran
சனி, 9 மார்ச் 2024 (15:57 IST)
ஒடிசாவில் பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் இணைந்து கூட்டணியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கட்சிகள் மத்தியில் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததாகவும் இதனை அடுத்து ஒடிசாவில் பாஜக தனித்து போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
பாஜக கூட்டணியில் பிஜு ஜனதா தளம் கட்சி இணைந்து தேர்தலை சந்திக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று டெல்லியில் முக்கிய பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் பாஜக 14 தொகுதிகளிலும் பிஜு ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று பாஜக கூறியதாகவும் அதை பிஜு ஜனதா தளம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அடுத்து இரு கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து ஒடிசாவில் பாஜக தனித்து போட்டியிட  போவதாகவும் பிஜு ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருப்பதை எடுத்து அதிலும் இரு கட்சிகளும் கூட்டணி இல்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்