மத்திய பிரதேசம் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!

Sinoj

சனி, 9 மார்ச் 2024 (15:11 IST)
மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
மத்திய பிரதேசம் மா நிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இம்மாநில தலைநகரான போபாலில் தலைமைச் செயலகம் அமைந்துள்ளது. இந்த தலைமைச் செயலகத்தில்தான் அனைத்துவிதமான அரசுத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன.  
 
இந்த  நிலையில், இன்று காலையில், திடீரென்று தலைமைச் செயலகத்தின் 3 வது மாடியில் தீ பற்றியது. அந்த தீ மற்ற பகுதிகளுக்கும் பரவிய நிலையில், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
 
இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீர் பாய்ச்சி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது
 
இவ்விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு எதாவது காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ், தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டு இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்