விமான நிலையத்தில் பயோமெட்ரிக் பயணத்திட்டம் !

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (19:53 IST)
இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் காகித ஆவணமற்ற பயணத்திட்டத்தை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பயோமெட்ரிக் திட்டத்தை பயன்படுத்தி பெங்களூர்  விமான நிலையத்தில் இருந்து மும்மை விமான நிலையத்திற்கு பயணிகள் சென்றனர்.
இன்று, பெங்களூரில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு விஸ்தாரா விமான நிறுவனம் மூலம் சென்ற பயணிகள் டிஜி யாத்ரா என்ற திட்டத்தில் இணைந்து ஒன் ஐடி பயோமெட்ரிக் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர்.
 
அவர்கள் மும்பை விமான நிலையத்தில்  சென்று அங்கிருந்து வெளியேறும் போதும், அதேபோன்று பயோமெட்ரிக் முறையைப் பயன்படுத்திச் சென்றனர்.
 
இதுகுறித்து இந்த விமான நிலையத்தில் கூறப்பட்டுள்ளதாவது : தனிமனித ரகசியம் காப்பதற்க்கா ஐரொப்பிய ஒன்றியத்தின் பொதுதகவல் பாதுகாப்பு ஒழுங்கு முறையி விதிகளை பின்பற்றுகிறோம். பயணிகளின் பயணம் முடிந்த ஒருசில மணிநேரங்களில் இந்த பயணம் அழிக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது,மேலும் இவ்வாண்டு இறுதிக்குள்ளாக பெங்களூர் விமான நிலையத்தில் சுமார் 350 பயோ மெட்ரிக் அமைப்புகள் உருவாக்கும் திட்டம் முடிவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்