மீனின் வயிற்றுக்குள் சிகரெட் பாக்கெட், டிஜிட்டல் கேமரா – ஆய்வாளர்கள் அதிர்ச்சி

திங்கள், 17 ஜூன் 2019 (16:41 IST)
கடந்த பத்தாண்டுகளில் கடல் உயிரினங்கள் மனிதன் ஏற்படுத்தும் சுற்றுசூழல் மாசுபாட்டால் தொடர்ந்து அழிவை சந்தித்து வருகின்றன. சமீப காலமாக திமிங்கலம் போன்ற பெரிய கடல் மிருகங்கள் இறந்து கரை ஒதுங்குவதும், அவற்றின் வயிற்றில் கிலோ கணக்கில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடப்பதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த முறை அதை விடவும் ஆபத்தான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. வௌவால் மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியிருக்கிறது. அதை இயற்கை ஆர்வலர்கள் சிலர் வயிற்றை அறுத்து பார்த்தபோது ஆராய்ச்சியாளர்களே அதிர்ச்சி அடைந்தார்கள். அதனுள் ஒரு காலியான பீர் பாட்டில், ஒரு புத்தகம், ஒரு சிகரெட் பாக்கெட் மற்றும் ஒரு டிஜிட்டல் கேமரா ஆகியவை இருந்தது. நாம் கடலை எந்த அளவுக்கு மாசுப்படுத்தியிருக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணமாக இது இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் இன்ஸ்டாக்ராமில் சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்