பயணிகளுக்கு ரசீது கொடுக்க வேண்டும்: ஓலா நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (07:07 IST)
பயணிகளுக்கு ரசீது கொடுக்க வேண்டும் என ஓலா  நிர்வாகத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓலா ஆட்டோ மற்றும் கார்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும், திரும்ப செலுத்த வேண்டிய தொகைக்கு வாடிக்கையாளர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட வழி முறையை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

செயலி மூலம் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யும் ஓலா, தனது வாகனங்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சில குறிப்பிட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும் என நுகர்வோர் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் நுகர்வோர் ஆணையம் விசாரணை செய்தது. விசாரணையின் முடிவில், ஓலா நிறுவனத்திற்கு, பயணிகளுக்கு தங்கள் பணத்தை திரும்ப பெறும் போது, நேரடியாக தங்கள் வங்கி கணக்கில் பணத்தை செலுத்த அனுமதிக்கும் வழிமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும், ஓலா செயலி மூலம் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆட்டோ சவாரிகளின் போது பயணிகளுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வாகன சேவையில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய இந்த வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை ஓலா மீது மொத்தம் 2000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதனுடைய பின்னணியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்