தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நவீன வசதிகளுடன் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழக அரசின் சார்பில் பெங்களூரு நகருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதிநவீன வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகளில் ஏசி, ஸ்லீப்பர், ஸ்லீப்பர் அல்லாத படுக்கை வசதி கொண்ட செமி-ஸ்லீப்பர் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும், இந்த பேருந்துகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.