பாபா சித்திக் கொலை குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன்: பீகார் எம்பி பப்பு யாதவ்..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (07:01 IST)
மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாபா சித்தி மும்பையில் நேற்று முன்தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன் என்று பீகார் எம்பி பப்பு யாதவ் தெரிவித்துள்ளார்.

சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி அரசாங்கத்திற்கு சவால் விடும் வகையில், மக்களை கொன்று கொண்டிருப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பஞ்சாபி பாடகர் சித்து மற்றும் தரணி சேனா உள்ளிட்டவர்களின் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் முக்கிய பங்கு வகிக்கின்றார். தற்போது பாபா சித்திக் கொலை வழக்கில் அந்த நபர் சம்பந்தப்பட்டுள்ளார்.

சட்டம் என்னை அனுமதித்தால், லாரன்ஸ் பிஷ்னோய் ஒட்டுமொத்த கும்பலையும் 24 மணி நேரத்தில் என்னால் அழித்துவிட முடியும் என்று பப்பு யாதவ் கூறியுள்ளார்.

இதனால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்