பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:42 IST)
பீகார் மாநில சட்டசபைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது சட்டசபையின் காலம் முடிவடைவதால் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும், இம்மாநிலத்தின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று 12:30 மணிக்கு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சற்றுமுன் பீகார் சட்டமன்ற தேர்தல் குறித்த விபரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி பீகாரில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்.28-ல் தேர்தல் நடைபெறும் என்றும்,  2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ல் தேர்தல் நடைபெறும் என்றும், 3வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பீகார் சட்டசபைக்கு மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன என்பதும் இதில் 122 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிகள் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம், நிதிஷ்குமாரின் ஜனதா தள், பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்