அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் நன்கொடை அளித்து வரும் நிலையில் பிச்சைக்காரர்கள் இணைந்து இலட்சக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இந்நிலையில் அதுகுறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிச்சைக்காரர்கள் ஒன்று சேர்ந்து அயோத்தி ராமர் கட்டளைக்காக 4.5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் குழுவாக இணைந்து இந்த பணத்தை திரட்டி அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களின் பங்களிப்பை பாராட்டும் விதமாக கும்பாபிஷேக விழாவிற்கு பிச்சைக்காரர்கள் சிலரை மட்டும் அழைக்க அயோத்தி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவிலுக்காக பிச்சைக்காரர்கள் ஒன்றிணைந்து 4.5லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது