சிறந்த படம் அயோத்தி… சிறந்த நடிகர் வடிவேலு- சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அளிக்கப்பட்ட விருதுகள்!

வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:34 IST)
சென்னை சர்வதேச திரைப்பட விழா 20 ஆண்டுகளைக் கடந்து, 21 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.  உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த விழாவில் விடுதலை, மாமன்னன், அயோத்தி உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் போட்டி பிரிவில் கலந்துகொண்டன. இந்நிலையில் சிறந்த படமாக மந்திரமூர்த்தி இயக்கிய அயோத்தி திரைப்படமும், சிறந்த நடிகராக மாமன்னன் திரைப்படத்துக்காக வடிவேலுவுக்கும், சிறந்த நடிகைக்கான விருது அயோத்தி படத்தின் ப்ரீத்தி அஸ்ராணிக்கும் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்