அயோத்தியில் விமான நிலையம் திறப்பு.. முக்கிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள்..!

வியாழன், 21 டிசம்பர் 2023 (07:49 IST)
அயோத்தியில் வர்ரும் ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அயோத்தியில் விமான நிலையம் திறக்கப்படவுள்ளது.
 
டிசம்பர் 25ஆம் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் அன்று இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அயோத்தியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை செய்யப்படும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. 
 
குறிப்பாக அயோத்தியிலிருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து அயோத்திக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் நேரடி விமானங்கள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அகமதாபாத் - அயோத்தி  இடையே விமானங்கள் இயக்குவது குற்ரித்தும் இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  
 
மேலும் அயோத்தி - டெல்லி இடையே இண்டிகோ விமானத்தில் செல்ல ரூ.7,799 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி, அகமதாபாத் மட்டுமின்றி சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை விரைவில் செய்யப்படும் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்