வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

Mahendran
வியாழன், 4 ஜூலை 2024 (12:27 IST)
டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சாலையில் வழிவிடாமல் சென்ற நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுனரை இளம் பெண் வெளியே இழுத்து போட்டு நடுரோட்டில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த இளம் பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் ஆட்டோ ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த சாலையில் புல்லட்டில் சென்ற இளம் பெண்ணுக்கு ஆட்டோ ஓட்டுநர் வழிவிடவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த இளம் பெண் அந்த ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ ஓட்டுநரை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் ஆட்டோ ஓட்டுனரின் மண்டை உடைந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் விளக்கம் அளித்த போது சாலையில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் இருந்ததால் தன்னால் வழிவிட இயலவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், தாக்குதல் நடத்திய இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்