இந்த நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்களும் வெளியாகி வருகின்றன. சென்னையை பொருத்தவரை, இன்று வெயில் காணப்பட்டாலும், இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று மாவட்டங்களில், அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.