டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

Mahendran

வெள்ளி, 28 ஜூன் 2024 (10:34 IST)
டெல்லியில் நேற்று கன மழை பெய்த நிலையில் டெல்லி விமான நிலையம் மேற்கூரை இடிந்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடிய நிலையில் அண்டை மாநிலமான ஹரியானாவிஅம் இருந்து தண்ணீர் கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அளவுக்கு தண்ணீர் கஷ்டம் இருந்தது என்பதை தெரிந்தது. 
 
இந்த நிலையில் நேற்று இரவு திடீர் என டெல்லியில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக டெல்லி விமான நிலையப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது
 
அந்த மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது 
பயணிகளை அழைக்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் இந்த விபத்தில் சேதம் அடைந்துள்ளதாகவும் இந்த விபத்து குறித்து சாரணை நடந்த உத்தரவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்