கவிதாவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு

Mahendran

செவ்வாய், 2 ஜூலை 2024 (10:46 IST)
முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் மகள் கவிதா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கில் முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவருடைய நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டது. இதனால் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த மனு விசாரணையின் போது இந்த வழக்கில் தொடர்புடைய ஐம்பது குற்றவாளிகளில் ஒருவர்தான் கவிதா என்றும் சட்டத்தில் பெண்களுக்கு தனி அணுகுமுறை கடைபிடிக்கப்படும் என்ற அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கவிதா வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் செல்வாக்கு மிகுந்த கவிதா வழக்கின் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது என்று அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்