பதவியை ராஜினாமா செய்த இந்திய தேர்தல் ஆணையர்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (16:48 IST)
பதவியை ராஜினாமா செய்த இந்திய தேர்தல் ஆணையர்
இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா என்பவர் பதவியில் இருந்த நிலையில் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 
 
இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் தனது இந்திய தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சற்று முன் தனது இந்திய தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்திய ஜனாதிபதி மாளிகைக்கு அவர் ராஜினாமாவை அனுப்பியுள்ளதாகவும், ஜனாதிபதி மாளிகை அவர் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பதவியில் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் தான் அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்