மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில நாட்கள் முன்னர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மூன்று முறை சோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என கூறப்பட்டதால் வீடு திரும்பினார். இதனால் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவில் கூட அமித்ஷா கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் குணமாகி வீடு திரும்பிய அமித்ஷாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் அவருக்கு கொரோனா இல்லை என்றும் சில நாட்களாக தொடர்ந்த உடல்வலி போன்ற பிரச்சினைகளால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.