அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளராக இருந்த வேல்முருகன் மீது கட்சி நிர்வாகிகள் அனைவரும் குற்றம்சாட்டி அவரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புதுச்சேரி அமமுக செய லாளராக வேல்முருகனை மீண்டும் நியமித்துள்ளது கட்சித் தலைமை.
இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இதற்கானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் அக்கடிதத்தை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அனுப்பியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் பலமிழந்து காணப்படும் அமமுக புதுச்சேரியிலும் தனது பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.