சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு தண்டனை : நீதிமன்றம் அதிரடி

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (21:08 IST)
கடந்த  2013 ஆம் ஆண்டு  குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 சகோதரிகளை கற்பழித்ததாக சாமியார் ஆசாரம் பாபு மற்றும் அவரது மகன் நாரயணன் சாய் ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் ராராயணன் சாய்  ஆகிய இருவரும் சட்டத்திற்கு விரோதமாக சகோதரிகளை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தனர்.
 
இதுசம்பதமான வழக்கை விசாரித்துவந்த சூரத் அமர்வு நீதிமன்றம் கடந்த 26ஆம் தேதி நாராயணன் சாய் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டது.
 
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான வாதம் நீதிமன்றத்தில்  இன்று நடைபெற்றது. இந்த வாதத்தில் முடிவில் குற்றவாளி நாராயணனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் 1லட்சம் ரூபார் அபராதம் விதிக்கப்பட்டது.
 
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25 ஆம்தேதி சாமியார் ஆசாராம் பாபு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்