போதையில் தாயை பாலியல் பலாத்காரம் செய்த மகனை சிறையில் அடித்து கொன்ற கைதிகள்

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2016 (10:50 IST)
சத்தீஸ்கரில் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை குடிபோதையில் தனது தாயை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளார்.


 
 
தாயை பலாத்காரம் செய்த அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சதீஸ்கர் மாநிலம் துர்க்  சிறையில் 14-ஆம் நம்பர் அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையில் 120 கைதிகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்ட அவரை சிறை வளாகத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
அந்த சிறையில் இருந்த கொலை குற்றவாளிகள் சந்தோஷ் கடா மற்றும் தினேஷ் திவாரி ஆகியோர் அவரை தாக்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக மற்ற கைதிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்