ஐநா சபையில் இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்! - 50 ஆண்டுகளுக்கு பின் கவுரவம்

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (14:54 IST)
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் ஐநா சபையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. அன்றைக்கு ஐநா வளாக அரங்கில், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 

 
ஐக்கிய நாடுகள் அவையில் கொண்டாடப்பட உள்ள இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்கு முன்னர் கடந்த 1966ஆம் ஆண்டு பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
 
அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் மற்றொரு இந்தியரின் இசை நிகழ்ச்சி ஐ.நா. சபையில் நடைபெற உள்ளது. இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்