நேற்று ஆளுநர் சக்சேனாவுக்கு முதல்வர் அதிஷி எழுதிய கடிதத்தில், நவம்பர் 22ஆம் தேதி நடந்த மத குழு கூட்டத்தில் உங்கள் வழிகாட்டுதலின் பேரில் டெல்லி முழுவதும் உள்ள பல கோவில்கள், கட்டமைப்புகளை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதோடு, இடிக்கப்படும் கோயில்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.
இவற்றில் பல கோயில்கள் மற்றும் புத்தமாக வழிபாட்டுத்தலங்கள் உள்ளடங்கும் என்றும், டெல்லி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இந்த கோயில்களை இடிக்காமல் எந்த மத உணர்வுகளும் புண்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை துணைநிலை ஆளுநர் சக்சேனா மறுத்துள்ளார். தனது முன்னோடியான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்விகளிலிருந்து திசை திருப்ப மலிவான அரசியல் முதலமைச்சர் அதிஷி செய்கிறார் என்றும், அரசியல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே நாச வேலையில் ஈடுபடும் சக்திகளுக்கு எதிராக கூடுதல் கண்காணிப்புடன் இருக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.