அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

Mahendran

புதன், 1 ஜனவரி 2025 (10:45 IST)
அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை தவற விட்டவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ரூ 5000 அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த கால அவகாசத்தை வருமான வரித்துறை நீடித்துள்ளது. அதாவது ஜனவரி 15ஆம் தேதி வரை அபராதத்துடன் தாமதமான அல்லது திருத்தப்பட்ட வரி வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் ஜனவரி 15ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்