"உங்கள் வேலை, வாழ்க்கை மற்றும் சமநிலையை என் மீது திணிக்க கூடாது. எனது வேலை, வாழ்க்கை சமநிலையை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஒருவர் தனது குடும்பத்துடன் நான்கு மணி நேரம் செலவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார் என்றால், இன்னொருவர் எட்டு மணி நேரம் செலவு செய்ய வேண்டும் என்று நினைப்பார். அது அவர்களுடைய சொந்த முடிவு.
உங்கள் மனைவி ஓடி போக வேண்டும் என்று இருந்தால், நீங்கள் குடும்பத்துடன் எட்டு மணி நேரம் செலவு செய்தாலும் அது நடக்காமல் இருக்க போவதில்லை. உங்கள் குழந்தைகளும் உங்களுக்கு குடும்பம் மற்றும் வேலைக்கு அப்பால் ஒரு உலகமே இல்லை."
"அதை அறிந்து அனைவரும் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு பிடித்ததை செய்யும் போது வேலை, வாழ்க்கை தானாகவே சமநிலையில் இருக்கும். சிலருக்கு அதிகம் பிடித்தது குடும்பமாக இருக்கும், சிலருக்கு வேலை அதிகமாக பிடிக்கும். இந்த இரண்டையும் தாண்டி ஒரு உலகம் இல்லை. இங்கு யாரும் நிரந்தரமாக வரவில்லை. இதை ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டால், வாழ்க்கை இன்பமாக இருக்கும்," என்று கூறினார்.