ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமண தினத்தில் பொதுவிடுமுறையா?

Mahendran
திங்கள், 8 ஜூலை 2024 (13:31 IST)
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ள நிலையில் இந்த திருமணத்தை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என மும்பை வாசிகள் எதிர்பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சண்ட் திருமணம் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

 ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரை மும்பையில் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெறிப்படுத்தப்படும் மாற்று வழிகள் குறித்து மும்பை போக்குவரத்து காவல்துறை ஆய்வு செய்து வரும் நிலையில் திருமணம் நிகழ்வுகள் அன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும் என மும்பை மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே மும்பை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக காணப்படும் நிலையில் இந்த திருமணம் காரணமாக பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் தாமதமாக செல்ல வேண்டிய நிலை இருக்கும் என்றும் எனவே அன்றைய அந்த தினத்தில் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்