எமி ஜாக்சன் வைத்த பேச்சிலர் பார்ட்டி.. இரண்டாம் திருமணம் எப்போது?

Siva

புதன், 26 ஜூன் 2024 (19:56 IST)
நடிகை எமி ஜாக்சன் விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய இருக்கும் நிலையில் அதற்கு முன் அவர் தனது நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி வைத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
மதராசபட்டினம் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான எமி ஜாக்சன் அதன் பின் தாண்டவம், தெறி, 2.0, தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும் சமீபத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் ஒன் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஜார்ஜ் என்ற லண்டன் தொழிலதிபரை திருமணம் செய்த எமி ஜாக்சன் அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வரும் நிலையில் அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் திருமணத்திற்கு முன் தனது நண்பர்களுக்கு தனி விமானத்தில் எமி ஜாக்சன் பேச்சிலர் பார்ட்டி வைத்த நிலையில் அந்த பார்ட்டியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்