பாஜக பலவீனமாக இருக்கிறது ; ப்ளீஸ் எங்க கட்சிக்கு வாங்க - ரஜினிக்கு மீண்டும் அழைப்பு

Webdunia
புதன், 24 மே 2017 (12:31 IST)
தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால், நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணையவேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசினார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “பாஜகவின் கதவுகள் ரஜினிக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது. அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி முதலில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரிவித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார். 
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமித்ஷா “தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருக்கிறது. எனவே, ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம். இனி அவர்தாம் இறுதி முடிவு எடுக்க வேண்டும்” என ரஜினிக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்