ஷீனாபோரா கொலை வழக்கு: இன்ஸ்பெக்டர் மனைவி கொலை, மகன் மாயம்!!

Webdunia
புதன், 24 மே 2017 (12:17 IST)
தொழிலதிபர் இந்திராணி முகர்ஜி மகள் ஷீனா போரா கொலை வழக்கு நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
இது தொடர்பாக இந்திராணி கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த கொலை பற்றிய செய்திகள் மீண்டும் ஊடங்களில் வெளியானது. 
 
இந்நிலையில், ஷீனாபோரா கொலை வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் கொலை வழக்கை விசாரித்த டீமை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தியானேஸ்வர் கனோரின் மனைவி அவரது வீட்டுக்குள் வைத்தே குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
அவரது மகன் மாயமாகிவிட்டார். எனவே, இன்ஸ்பெக்டரின் மகன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோனத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுயுள்ளனர். இந்த கொலை மற்றும் கடத்தல் மும்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்