மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த ஆட்சியை கலைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தீவிரமாக முயற்சி செய்தது. ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை
இந்த நிலையில் பாஜக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் தனது உட்கட்சி விவகாரம் காரணமாக தற்போது ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் திடீரென மாயமாகி உள்ளனர் என்றும், அவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பெங்களூரில் தங்கி இருக்கலாம் என்றும் சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது
நள்ளிரவில் அமித்ஷா நடத்திய மீட்டிங்:
இந்த நிலையில் மத்திய பிரதேச விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவில் திடீரென ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆக இருக்கும் சிந்தியா உள்பட 17 எம்எல்ஏக்களை பாஜக வளைக்க முயற்சி எடுக்கப்படும் என்றும் சிந்தியாவுக்கு முதல்வர் பதவி அல்லது ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிந்தியாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி அவரை தங்கள் பக்கம் பாஜக இழுத்துவிட்டால் மத்திய பிரதேசத்தில் ஆட்சி மாறும் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதால் அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது