4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பலி: உலக நாடுகள் திணறல்!

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (08:36 IST)
உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 4 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 113 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் மற்ற நாடுகளில் பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 144 பேர் இறந்திருப்பது ஐரோப்பிய தேசங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் உயிர்பலி கொண்ட வைரஸாக கோவிட்-19 மாறியிருக்கிறது. இதற்கான சரியான மருத்துவ முறைகளையோ, முறிவு மருந்துகளையோ கண்டுபிடிக்க இயலாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், இதற்கு முடிவுதான் என்ன என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்