கடந்தாண்டு முதல் ஐடி நிறுவனங்கள் மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமேசானில் இருந்து மேலும் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் முன்னணி நிறுவனங்களான எலான் மஸ்கின் டுவிட்டர், பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட், சுந்தர் பிச்சை சி.இ.ஓவாக உள்ள கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து சமீபகாலமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் உள்ளிட்டவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானிலும் இதே பணிநீக்க நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அமேசானில் மேலும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளளதாக தகவல் வெளியாகிறது
அதன்படி, அமேசானில் இணைய சேவைகள், மனித வளம், ஆகிய பிரிவுகளில் பணியாற்றியவர்கள் வேலையிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அமேசான் சி.இ.ஓ ஆண்டி ஜேசி கூறியிருந்தார்..
சீரற்ற பொருளாதார நிலையால் மார்ச் மாதம் அந்நிறுவனத்தின் பணியாளர்கள் 9 ஆயிரம் பேரை நீக்கவுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.