மாமன்னன் பட ஃபர்ஸ்ட்லுக் எப்போது ரிலீஸ்? புதிய அப்டேட்

சனி, 29 ஏப்ரல் 2023 (19:07 IST)
இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே வரும்  ஜூன் மாதம்  29 ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு போஸ்ட் புரடக்சன்  வேலைகள் செய்து வருகின்றது.

மாமன்னன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்று ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில்,  மாமன்னன் பட அப்டேட் லோடு ஆகிக் கொண்டிருக்கிறது. இன்று மாலை    மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்தது.

அதன்படி, தற்போது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்  இன்று மாலை  இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பற்றிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதில், வரும் மே மாதம் 1 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்