கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (14:45 IST)
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் 7 ஆண்டுகள் கழித்து உயிருடன் இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் என்ற பகுதியைச் சேர்ந்த  மைனர் பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு காணாமல் போனதாக பெண்ணின் தந்தை போலீஸில் புகாரளித்தார்.

இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர், அதில், அப்பெண் கொலை செய்யப்பட்டு விட்டதாகக் கூறி விஷ்ணு என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், அலிகாரை சேர்ந்த மைனர் பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில்,  7 ஆண்டுகள் கழித்து அவர் உயிருடன் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அப்பெண்ணுக்குத் திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

 
Edited By Sinoj  

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்