குவார்ட்டர் ரூ.5, ஃபுல் ரூ.20 உயர்வு: குடிமகன்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (20:33 IST)
புதுச்சேரி என்றதும் பலருக்கு ஞாபகம் வருவது அங்கு மலிவாக கிடைக்கும் மதுவகைகள் தான். இதற்காக பலர் தமிழகத்தில் இருந்து புதுவைக்கு சென்று மதுவாங்கி கொண்டு வருவதும் அதில் சிலர் போலீசார்களால் பிடிபடுவதும் வாடிக்கை

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வருமானத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று முதல் கலால்வரியை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. இதனால் இனிமேல் குவாட்டர் பாட்டில் ரூ.5, ஃபுல் பாட்டில்களுக்கு ரூ. 20 வரை உயர்கிறது,. இந்த திடீர் விலையேற்றத்தால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விலை உயர்வுக்கு பின்னரும் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் விற்பனையாகும் மதுபாட்டில்களின் விலையை விட புதுச்சேரியில் விலை குறைவு என்பது ஒரு ஆறுதல் ஆகும். இந்த விலையேற்றத்தால் மதுவிற்பனை அளவு குறையாது என்பதும், அதே நேரத்தில் புதுச்சேரி மாநில வருமானம் கணிசமான அளவிற்கு உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்