பிளாஸ்டிக் தடை –பிஸ்கட் , ஷாம்ப் கவர்களுக்கும் ஆப்பு ?

வியாழன், 24 ஜனவரி 2019 (16:59 IST)
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை கடந்த ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படு வருகிறது. ஆனால்  சில உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு மட்டும் அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்காத மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தடை விதிக்கப்பட்டு ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. உணவுப்பொருட்கள், பால், எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதால் இத்திட்டம் வெற்றி திட்டமாக மாறியது. தமிழகத்தை அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் வரும் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிஸ்கட் மற்றும் ஷாம்ப் பாக்கெட்டுக்கள், வெளிநாட்டுக் குளிர்பானங்கள் முதல் பல வகை நொறுக்குத் தின்பண்டங்கள் வரை பிளாஸ்டிக் கவரில்தான் பேக் செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த வகை கவர்கள் மீண்டும் சுழற்சி செய்ய முடியாத வகை பிளாஸ்டிக்கள். சுற்றுச்சூழலை இவ்வகை பிளாஸ்டிக் பேப்பர்கள்தான் மாசுபடுத்துகின்றன. ஆனால் இதனை தடை செய்யாமல் மீண்டும் சுழற்சி செய்யும் வகையில் உள்ள கேரிபேக்குகளை அரசு தடை செய்துள்ளது ஒருதலைப்பட்சமானது என்ற குற்ற்ச்சாட்டும் எழுந்தது.

இதையடுத்து தமிழகத்தில் பிஸ்கட்டுகள், கிரீம்கள், ஷாம்பூ போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கும் தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது, இது சம்மந்தமாக இவ்வகைப் பொருட்களை உற்பத்தி செய்யும் 100 நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டிஸில் ஒரு மாதத்திற்குள் பிளஸ்டிக் கழிவு மேலாண்மை விதித்துள்ள விதிகளுக்கு உட்பட்டப் பொருட்களைக் கொண்டே பொருட்கள் பேக் செய்யப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தி, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பதிவு செய்ய வேண்டும். அதை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை சந்தை மற்றும் விற்பனை செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரைவில் பிஸ்கட் மற்று ஷாம்ப் கம்பெனிகளும் பிளாஸ்டிக் அல்லாத மற்ற பொருட்களைக் கொண்டே பேக் செய்து விற்பனை செய்ய முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்