வயநாடு பகுதியில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் இலவசம் என அதிரடியாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வயநாடு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 270க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்றும் இன்னும் நூற்றுக்கணக்கான புதைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த பகுதியில் இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல தொண்டு நிறுவனங்கள் தன்னார்வ ஆர்வலர்கள் இந்த பகுதிக்கு சென்று மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்களும் மீட்பு பணிக்கு நன்கொடை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வயநாடு பகுதியில் உள்ள தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டி நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கும் மூன்று நாட்களுக்கு ஒரு ஜிபி மொபைல் டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் போஸ்ட் வைட் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 30 நாட்கள் நீடிப்பு என்றும் ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தை அடுத்து ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனமும் இது போன்ற அறிவிப்பை வெளியிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.