மீண்டும் கனமழை.. மீட்புப்பணிகளில் தொய்வு... மீட்பு பணியாளர்கள் வெளியேற்றம்..!

Mahendran

புதன், 31 ஜூலை 2024 (19:04 IST)
வயநாடு அருகே முண்டக்கை, சூரல்மலை ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்பதற்காக மீட்பு பணியினர் இரவு பகலாக போராடிவரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் மீண்டும் கன மழை பெய்து உள்ளதால் மீட்பு பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
வயநாடு நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களில் கன மழை பெய்ததால் இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்டுவார்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றின் இடையே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியும் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தோர் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டோரின் சடலங்கள் ஆங்காங்கே மிதந்து கொண்டு இருப்பதாகவும் அந்த சடலங்களை கைப்பற்றி அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வயநாடு மீட்பு பணி குறித்து இன்று மக்களவையில் பேசிய ராகுல் காந்தி இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டில் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். மேலும் மத்திய அரசு மீட்பு பணிக்க்கு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக மீட்பு பணிகளுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்