டாடாவின் கைகளுக்கு செல்லும் ஏர் இந்தியா??

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (11:22 IST)
டாடா நிறுவனம் செலுத்திய ஏலத்தொகை ஏற்கப்பட்டால் 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் என தெரிகிறது. 

 
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனியார் வசம் செல்ல இருப்பதை அடுத்து இந்த நிறுவனத்தை வாங்க ஏலம் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ஏலத்தொகையையும் டாட்டா குழுமம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
டாடா நிறுவனம் செலுத்திய ஏலத்தொகை ஏற்கப்பட்டால் 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும் என்றும் நீண்ட நாள் கனவான விமான நிறுவனம் டாட்டா வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே தற்போதைய தகவலின் படி ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா குழுமத்துக்கே வெற்றி வாய்ப்புள்ளதாக ஏர் இந்தியாவின் முன்னாள் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா தெரிவித்துள்ளார். 
 
டாடா குழுமமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டிய நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமும் தீவிரம் காட்டி வருவதாகவும் எனவே அந்த குழுமத்துக்கே வெற்றி கிடைக்கும் எனவும் ஏர் இந்தியா முன்னாள் இயக்குனர் ஜிதேந்தர் பார்கவா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்