விமான நிலைய கடையில் திருடிய ஏர் இந்திய அதிகாரிக்கு வந்த சோதனை !

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (17:25 IST)
சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு மணி பர்ஸ் கடையில் ஒரு பர்ஸை திருடியதாக புகார் எழுந்தது.  இதையடுத்து ஏர் இந்தியாவின் மண்டல இயக்குநருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின்றது.
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி , ஏர் இந்தியா நிறுவனத்தின் கிழக்கு பகுதி மண்டல் இயக்குநர் ரோஹித் பாஷின் என்பவர்  ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்குச் சென்றார். அங்கு விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று சில பொருட்கள் வாங்கியவர், அங்கிருந்த ஒரு மணி பர்ஸை திருடிவிட்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. 
 
இதுகுறித்து கடை நிவாகம் சிட்னி போலீஸாரில் புகார் தெரிவிக்கவே, அவர்கள் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயர் பெரிதும் பேசுபொருளானது. இதனையடுத்து ரோஹித்தை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது நிர்வாகம், பின்னர் ஏர் இந்தியா நிர்வாகம் நடத்திய விசாரணையி அவர் திருடியது நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவு நீக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அவர் கட்டாய ஒய்வில் பணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகிறது. இந்த சமபவம் ஏர் இந்தியா அதிகார்கள் வட்டார அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்