ஏர் இந்தியா விமான சேவை உலகம் முழுவதும் முடக்கம் - பயணிகள் அவதி !

சனி, 27 ஏப்ரல் 2019 (09:03 IST)
ஏர் இந்தியா விமான சேவையின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக இன்று உலகம் முழுவதும் அதன் சேவை முடக்கமாகியுள்ளது.

இன்று காலை முதல் ஏர் இந்தியா விமானங்கள் தரையிரங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் மும்பை, டெல்லி மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்திலேயே பரிதவித்து வருகின்றனர்.

இந்த குழப்பங்களுக்குக் காரணம் ஏர் இந்தியாவின் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனைகளே காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் உலகம் முழுவதும் ஏர் இந்தியா விமான சேவை முடங்கியுள்ளது. இது குறித்து பதில் அளித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகிகள் ’எங்களது தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். கூடிய விரைவில் கோளாறுகள் தீர்க்கப்பட்டு விமான சேவை தொடரும். அசௌகர்யத்துக்காக நாங்கள் வருந்துகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பயணிகள் விமானநிலையத்தில் தாங்கள் காத்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்