80,000 கோடி கிராண்ட்டட்: ஜம்மு காஷ்மீருக்கு ஐஐடி, ஏய்ம்ஸ்!!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (12:11 IST)
மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பணிக்காக 80,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 
 
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து ஜம்மு, லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. 
 
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அரசு அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. 
 
இதற்காக முதற்படியாக 80,000 கோடி ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து மின்சார உற்பத்தி, நீர்பாசன திட்டம், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்