நேற்று பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் டாக்டர் செரியன் கலந்து கொண்ட போது, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நேற்று இரவு 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த நோயாளிகளிடமிருந்து இதயத்தை எடுத்து, அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு பொருத்தி, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்தவர் டாக்டர் செரியன் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முறையில் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவத்துறையில் அவரது சேவையை பாராட்டி, பத்மஸ்ரீ விருது மத்திய அரசு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவத் துறையில் அனுபவம் கொண்ட டாக்டர் செரியன் மறைவு, மருத்துவ துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவருடைய மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.