காஷ்மீரில் மீண்டும் செல்ஃபோன் சேவை தொடக்கம்..

Arun Prasath

சனி, 18 ஜனவரி 2020 (16:28 IST)
ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட செல்ஃபோன் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, செல்ஃபோன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றம் ஓரளவு குறைந்த நிலையில் தற்போது செல்ஹோன் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் உள்ளூர் பிரீபெய்டு சிம் கார்டுகளுக்கு, அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை வழங்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் 10 மாவட்டங்கள், காஷ்மீரின் குவாப்ரா, பந்திபோரா ஆகிய பகுதிகளில் போஸ்ட்பெய்ட் சிம்கார்டுகளுக்கு பட்டியலிட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க 2ஜி இண்டர்நெட்டை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்