நேரு மட்டுமல்ல, இந்திரா காந்தி, வாஜ்பாயும் 3 முறை பிரதமர் ஆகியுள்ளனர்.. ஜெய்ராம் ரமேஷ்

Mahendran
சனி, 8 ஜூன் 2024 (14:44 IST)
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமராகி உள்ளார் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறிவரும் நிலையில் அது தவறான தகவல் என்றும் இந்திரா காந்தி மற்றும் வாஜ்பாய் ஆகிய இருவரும் ஏற்கனவே மூன்றாவது முறை பிரதமர் ஆகியுள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1966, 67, 71 மற்றும் 80 ஆகிய 4 முறை பிரதமர் ஆகியுள்ளதாகவும் அதேபோல் வாஜ்பாய் 1996, 98 , 99 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரதமர் ஆகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 நேருக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராக பதவி ஏற்கப் போகும் ஒரே மனிதர் மோடி அல்ல என்றும் அப்படி ஒரு பிம்பம் காட்டப்படுகிறது என்றும் தெரிவித்து வருகிறார். ஆனால் இந்திரா காந்தியும் வாஜ்பாயும் தொடர்ச்சியாக   10 ஆண்டுகள் ஆட்சி செய்து அதன் பின் மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கவில்லை என்றும் ஒரு சில காரணங்களால் ஆட்சியில் இருந்து விலகி அதன்பின் மூன்று முறை பிரதமராகி உள்ளனர் என்றும் பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்